பேரிழப்பு.. பெருந்துயரம்..! பி. டி. உஷாவின் கணவர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!
முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா கணவர் சீனிவாசன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தடகள வீராங்கனையும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான பிடி உஷாவின் கணவர் வி. சீனிவாசன் திடீரென உயிரிழந்தார். இந்திய விளையாட்டு உலகையும், அரசியல் வட்டாரத்தையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனிவாசன் கேரளாவின் கொழிக்கோடு மாவட்டத்தில் உள்ள திக்கோடி பெருமாள்புரம் என்ற இடத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிகாலை சுமார் 12.30 மணியளவில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு கீழே விழுந்தார்.
உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். அந்த சமயத்தில் பிடி உஷா டெல்லியில் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்ததால் வீட்டில் இல்லை. பின்னர் அவர் உடனடியாக வீடு திரும்பினார். உஷா 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி வி. சீனிவாசன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். சீனிவாசன் கேரளாவின் பொன்னானி பகுதியைச் சேர்ந்தவர். அவர் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர், பின்னர் டெபுடி எஸ்.பி. ஆக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார்.
சில ஆதாரங்களின்படி, அவர் பல்கலைக்கழக அளவில் கபடி வீரராகவும் இருந்துள்ளார். பி.டி. உஷாவின் கணவர் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பி.டி உஷாவின் கணவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெட்ரோல் ஊற்றி முதியவரை கொல்ல முயற்சி..! இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ? EPS ஆவேசம்..!
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் என கூறினார். தங்கள் அன்புக்குரியவரின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் பி.டி. உஷா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: SUZUKI HAYABUSA- வில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்..! வைரல் கிளிக்ஸ்..!