×
 

GSDP வளர்ச்சியில் தமிழ்நாடு நம்பர் ஒன்... இதுதான் திராவிட மாடல்... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...!

மத்திய அரசின் ஆதரவு இல்லாமலேயே GDSP விகிதம் உயர்ந்துள்ளதாக முதலமைச்ச ஸ்டாலின் தெரிவித்தார்.

திராவிட மாடல் ஆட்சியில், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 2021-22 நிதியாண்டில் ரூ.20.72 லட்சம் கோடி ஆக இருந்தது என்றும் அது 2024-25 நிதியாண்டில் ரூ.31.16 லட்சம் கோடி ஆக உயர்ந்துள்ளது எனவும் திமுக தெரிவித்துள்ளது. அதாவது 50% அபார வளர்ச்சியை 4 ஆண்டுகளில் எட்டியுள்ளது. தனிநபர் வருமானம் 2021-22 நிதியாண்டில் ரூ.2,42,339 ஆக இருந்தது, அது 2024-25 நிதியாண்டில் ரூ.3,61,619 ஆக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. அதாவது 49% அபார வளர்ச்சியை 4 ஆண்டுகளில் எட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

வானுயர் GSDP வளர்ச்சி விகிதம் என்றும் பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை என்று ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை எனவும் தெரிவித்தார்.

இருந்தும் GSDP வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல் என்று கூறினார். கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான் என்றும் சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி எனவும் கூறினார். 2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம் என்றும் மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிவனும், முருகனும் இந்து கடவுளா? குன்னக்குடிக்கே அன்னக்காவடி எடுத்தாலும் உங்க ஆட்டம் எடுபடாது..! சீமான் திட்டவட்டம்...!

நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்ட்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் என்பது தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்றும் தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி எனவும் கூறினார். 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன் என்றும் உறுதிப்பட கூறினார்.

இதையும் படிங்க: உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கு... அவ்ளோ அலட்சியம்..! இது தான் சமூகநீதியா என சீமான் கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share