×
 

#DON'T WORRY.. 2026 நம்ம கையில! திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

திமுகவில் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தும் விதமாக எட்டு மண்டல பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்த பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என் நேரு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் போது தமிழக மக்கள் யாருன்னு தெரியும்... எடப்பாடி பழனிசாமி சாடல்!!

திமுக சார்பில் தேர்தல் பணிகளை கவனிக்க 8 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிர்வாகிகளையும் தனித்தனியாக சந்தித்து கட்சிப் பணிகள், தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பச்சை துரோகம் செய்துவிட்டு பகல்வேஷம் போடுகிறார்... ஈபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share