×
 

நெருங்கும் தேர்தல்... உற்று நோக்கும் அரசியல் களம்..! திமுக மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..!

தஞ்சாவூரில் நாளை நடைபெறும் திமுக மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி, கட்சியின் முக்கியமான சார்பு அணிகளில் ஒன்றாக விளங்குகிறது. திமுக 1949-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட போது, திராவிட இயக்கத்தின் அடிப்படையில் சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தியது. இந்த இயக்கத்தின் தொடர்ச்சியாக, பெண்களின் உரிமைகள் மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தும் வகையில் மகளிரணி உருவாக்கப்பட்டது. திமுகவின் வரலாற்றில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, கல்வி வாய்ப்புகள், அரசியல் பங்களிப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதில் மகளிரணி முக்கிய பங்காற்றி வருகிறது.

 முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், 29.12.2025 அன்று திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கறுப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து டெல்டா மண்டல மகளிரணி மாநாடு நடைபெற இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் நாளை "வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டுக்கு துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையில் மாநாடு நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: சட்டவிரோத மது விற்பனையில் திமுக நிர்வாகி கைது... கஞ்சா கடத்தல் மையம் தமிழ்நாடு..! TTV தினகரன் குற்றச்சாட்டு..!

மாநாட்டுக்காக பிரம்மாண்ட மேடை, அரங்கம், இருக்கைகள் என ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் மாநாடு என்பதால் அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் வருகையில் முன்னிட்டு தஞ்சாவூரில் நாளை காலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கப்பு முக்கியம் பிகலு..! விசில் அடித்து தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்திய விஜய்… தொண்டர்கள் குஷி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share