உண்மையான கூட்டாட்சியை நிலை நிறுத்துவோம்… அரசியலமைப்பு தினத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை …!
ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம் என முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி இந்தியா முழுவதும் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இது வெறும் விடுமுறை அல்ல. இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடியான அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட நாளை நினைவுகூரும் தேசிய திருவிழா. 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணயச் சபை ஏற்றுக்கொண்டதை முன்னிட்டே இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. முழுமையாக அமலுக்கு வந்தது 1950 ஜனவரி 26 என்பதால் அதை குடியரசு தினமாகக் கொண்டாடினாலும், அச்சட்டத்தின் பிறந்த நாளாக நவம்பர் 26 ஆம் நாளை அரசு 2015 முதல் அரசியலமைப்பு தினமாக அறிவித்தது.
இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் அம்பேத்கர். அரசியல் நிர்ணயச் சபையின் வரைவுக்குழுத் தலைவராக இருந்த அவர், உலகின் பல்வேறு அரசியலமைப்புச் சட்டங்களை ஆழ்ந்து படித்து, இந்தியாவின் தனித்துவமான சமூக, பொருளாதார, வரலாற்றுப் பின்னணிக்கு ஏற்றவாறு இச்சட்டத்தை வடிவமைத்தார்.
அரசியலமைப்பு தினத்தை 2015-ல் தேசிய அளவில் கொண்டாடத் தொடங்கியதற்கு பின்னால் பெரிய அரசியல்-சமூக நோக்கமும் உள்ளது. அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் ஆண்டான 2015-ல், மோடி அரசு இந்நாளை அரசியலமைப்பு தினமாக அறிவித்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, இளைய தலைமுறையினருக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவது, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வளர்ப்பது ஆகியவை இதன் நோக்கங்கள்.
இதையும் படிங்க: விவசாயிகளின் பாதுகாவலர் முதல்வர் ஸ்டாலின்... ஆனால் இந்த EPS..! ஏ.கே.எஸ். விஜயன் கடும் குற்றச்சாட்டு
இந்த நிலையில், அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களை கூறியுள்ளார். நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள படி உண்மையான கூட்டாட்சியை நிலை நிறுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்து உள்ளார். இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்திற்கு சொந்தமானது அல்ல என்றும் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது எனவும் தெரிவித்தார். அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை சுருக்க நினைக்கும் சக்தியை எதிர்ப்பதை அரசியலமைப்பு தினத்தில் உறுதி ஏற்போம் என்றும் கூறினார். ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "போதும்... போதும்....லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது..." - ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த ஆர்.பி.உதயக்குமார்...!