×
 

ராமநாதபுரம் தண்ணி இல்லா காடா? மாற்றிக் காட்டிய திமுக... முதல்வர் பெருமிதம்...!

ராமநாதபுரம் தண்ணி இல்லாத காடு என்பதை திமுக அரசு மாற்றி காட்டியதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 428 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 50,732 பயனாளிகளுக்கு முதல்வர் வழங்கினார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 176.50 கோடி ரூபாய் மதிப்பிலான 109 முடிவுற்ற பணிவுகளையும், 134.45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 150 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி வைத்தார். 

ராமநாதபுரத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, நல்லிணக்கத்திற்கு பெயர் போன மண் இராமநாதபுரம் மண் என்றார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு சேதுபதி நகர் என பெயர் சூட்டியவர் கலைஞர் என கூறினார். நெஞ்சை அள்ளும் அழகிய கடற்கரை மாவட்டம் ராமநாதபுரம் என்றும் தெரிவித்தார்.

தண்ணீர் இல்லாத காடு என கூறப்பட்ட இராமநாதபுரத்தை மாற்றி காட்டியது திமுக அரசு என்று பெருமிதம் தெரிவித்தார். இரண்டே ஆண்டுகளில் ராமநாதபுரம் மக்களின் குடிநீர் தேவையை திமுக அரசு நிறைவேற்றியதாகவும் குறிப்பிட்டார். தற்போது திமுக அரசு அமைந்ததும் கூட்டு குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், விரிவு படுத்தப்பட்ட குடிநீர் திட்டம் வரும் டிசம்பர் மாதம் நிறைவு பெறுவதாகவும் தெரிவித்தார். 500 கிலோ மீட்டர் கிராம சாலையை நெடுஞ்சாலையாக மாற்றியவர் கலைஞர் கருணாநிதி எனவும் குறிப்பிட்டு பேசினார். ராமநாதபுரத்தில் ஐந்தாயிரம் சுனாமி குடியிருப்புகள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: 2026- லயும் நம்ம ஆட்டம் தான்... முசிறி தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஒன் டூ ஒன் ஆலோசனை...!

தமிழ்நாடு உப்பு கழகத்தை ராமநாதபுரத்தில் தொடங்கியவர் கலைஞர் என்றும் தெரிவித்தார். ஒவ்வொருவர் தேவையும், கனவையும் நிறைவேற்றும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக தான் இன்றைய நிகழ்ச்சி நடைபெறுவதாக குறிப்பிட்டு பேசினார். ராமநாதபுரம் பேருந்து நிலையம், தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடம், சமூக நீதி விடுதி, பரமக்குடி கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதிப் விடுதி ஆகியவற்றை திறந்து வைத்துள்ளதாக கூறினார். 

இதையும் படிங்க: கிருஷ்ணகிரிக்கு 5 மாஸ் அறிவிப்புகள்! எதிர்க் கட்சிகளுக்கு வைத்தெரிச்சல்... சூறையாடிய முதல்வர்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share