தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்... ரூ.13,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக முதல்வர் பெருமிதம்..!
இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு மொத்தம் 13 ஆயிரத்து 16 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம், தமிழ்நாட்டின் தொழில் துறையை உலக அரங்கில் முன்னிலைப்படுத்துவதற்கும், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கும் முக்கியமான முயற்சியாக அமைந்தது.
இதற்கு முன்பு, ஸ்டாலின் துபாய், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்திருந்தார். இந்தப் பயணமும் அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் தொழில் மற்றும் கலாசார பிம்பத்தை உயர்த்துவதற்கு முக்கிய பங்காற்றியது. ஆகஸ்ட் 30 அன்று சென்னை விமான நிலையத்திலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஜெர்மனிக்குப் புறப்பட்டார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதலமைச்சரின் தனி செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தொழில் துறை உயர் அதிகாரிகள் உடன் சென்றனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு மொத்தம் 13 ஆயிரத்து 16 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். மின்சார வாகன உற்பத்திக்காக ஹிந்துஜா குடும்பம் ஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அஸ்ட்ரோ ஜெனிக்கா நிறுவனம் சென்னையில் உள்ள கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை 176 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்துள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கே களங்கம்... பொறுத்து பார்த்து பொங்கி எழுந்த திருமா... சாட்டையை சுழற்றுவாரா ஸ்டாலின்?
ஜெர்மனியில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 720 கோடி ரூபாய் முதலீட்டில் 15 ஆயிரத்து 520 பேருக்கு வேலை கிடைக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். GCC, ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட துறையில் 1493 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 820 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: மனு கொடுக்க வந்தவரை நெஞ்சில் குத்திய எஸ்.ஐ! உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பதற்றம்