×
 

மருத்துவ படிப்பில் தமிழகத்தின் இடங்கள் இழப்பு...; சரண்டர் ஆனது ஏன்..? தவெக அரசை பூந்து விளாசிய ஸ்டாலின்..!!

முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு முக்கியமான விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மருத்துவப் படிப்புகளில் 27% இடஒதுக்கீட்டை தி.மு.க.வின் தொடர் போராட்டத்தின் விளைவாக உச்சநீதிமன்றம் உறுதி செய்ததை நினைவுகூர்ந்தார். ஆனால் இன்று, தமிழ்நாட்டின் உயர்சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவ இடங்கள் இழக்கப்படும் செய்தி வருவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார். 

ஸ்டாலின், தமிழக வெற்றி கழக அரசை நேரடியாக விமர்சித்தார். தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை “காற்றில் பறக்கவிட்ட” அரசு என்றும், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர்கள் “வாய்பொத்தி நின்றனர்” என்றும் குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியப் போக்கு ஏன்? மூத்த வழக்கறிஞர்களை நியமிப்பதில்கூட தாமதம் ஏன்? நியாயம் நம் பக்கம் இருந்தும் வலுவான வாதங்கள் எடுத்து வைக்காமல் ‘சரண்டர்’ ஆனதன் பின்னணி என்ன? என பல கேள்விகளை எழுப்பினார்.

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள். தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை? என்று கேட்டார். மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்? என கேட்டார்.

இதையும் படிங்க: சத்துணவுத் திட்டத்தில் சிக்கன் பிரியாணி சேர்க்கப்படுமா? முதலமைச்சர் விஜய் பரிசீலனை..!!

நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்.? 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது? என இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள் என்று கூறினார்.

எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம் என்றும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது. த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும் என ஸ்டாலின் கூறினார். 

இதையும் படிங்க: தவெக நிர்வாகியால் இளம்பெண் பாதிப்பு..! இப்ப எந்த படையை அமைக்க போறீங்க.! CM விஜய்க்கு நயினார் கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share