×
 

வண்ண மீன்கள் என்றாலே கொளத்தூர் தான்... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...!

சென்னையில் வண்ணமீன்கள் விற்பனை என்றாலே கொளத்தூர்தான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமதம் தெரிவித்தார்.

சென்னையின் வடக்குப் பகுதியில் அமைந்த கொளத்தூர், வண்ணமயமான அழகியல் மீன்களின் (ஆர்னமெண்டல் ஃபிஷ்) வணிகத்திற்கு பிரபலமான இடமாகத் திகழ்கிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகை மீன்கள் ஆஸ்கர்ஸ், கௌராமி, சக்கர் ஃபிஷ், கபி, கார்ப், கோல்ட் ஃபிஷ் போன்றவை விற்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் உள்ள மீன் வணிகம் மாதந்தோறும் சுமார் 300 கோடி ரூபாய் வியாபாரத்தை உருவாக்குகிறது, அதில் 90 சதவீதம் ஏற்றுமதியிலிருந்து வருகிறது. கொளத்தூரை உலகளாவிய அளவில் ஒரு முக்கிய வணிக மையமாக மாற்றும் நோக்கத்துடன், நவீன வண்ண மீன்கள் வணிக மையத்தை தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி வளர்ச்சி ஆணையத்தின் மேற்பார்வையில், 3.93 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த மையம், 1.25 லட்சம் சதுர அடி இடப்பரப்பைக் கொண்டுள்ளது. இரண்டு தளங்களைக் கொண்ட இந்தக் கட்டிடம், வண்ணமயமான சிலிண்டரிக்களால் அலங்கரிக்கப்பட்டு, பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 188 சிறிய மற்றும் பெரிய கடைகள் அமைந்துள்ளன.

இவை மீன் வளர்ப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்காக அமைக்கப்பட்டவை. கூடுதலாக, இரண்டு பெரிய மீன் காட்சி டேங்குகள், மூன்று உணவகங்கள், 400 வாகனங்களுக்கு இடமுள்ள பார்க்கிங் வசதி, அலுவலக இடங்கள், ஃபுட் கோர்ட் போன்றவை இதன் சிறப்பம்சங்கள். 

இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய்... கண்டிஷன் ஓகேவா இபிஎஸ்? டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி

இந்த நிலையில், சென்னையில் வண்ணமீன்கள் விற்பனை என்றாலே, அது கொளத்தூர்தான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமதம் தெரிவித்தார். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வண்ணமீன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர் என்றும் 2021-22-ஆம் நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததாகவும் கூறினார். நேற்று வில்லிவாக்கம் சிவசக்தி நகரில், இந்தியாவிலேயே முதன்முறையாக உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ணமீன் வர்த்தக மையத்தைத் திறந்து வைத்ததாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: முதன் முறையாக இணைய வழி கிராம சபை கூட்டம்... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share