×
 

கோவை, ஈரோட்டில் முதல்வரின் சுற்றுப்பயணம்... முழு விவரம் வெளியீடு...!

கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்வது தொடர்பான விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அந்தந்த மாவட்டங்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அறிவிப்பினை வெளியிட்டு வருகிறார்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் திமுக அரசு சார்பில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். நவம்பர் 25ஆம் தேதி கோவையில் செம்மொழிப் பூங்காவின் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மேலும் அன்றைய தினம் கோவையில் தொழில்துறை சார்பில் நடைபெறும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கே இருக்கிறார்.

இதையும் படிங்க: அரியணை நமக்கு தான்... அலர்ட்- ஆ இருக்கணும்... திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை...!

நவம்பர் 26 ஆம் தேதி ஈரோடு - மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து தீரன் சின்னமலையின் மணிமண்டபத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். ஈரோட்டில் 605 கோடி ரூபாயில் முடிவற்ற பணிகளை தொடங்கி வைத்து ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 491 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கேட்டத செய்யல..! பிரதமர் மோடியை சந்திக்க தயார்... முதல்வர் ஸ்டாலின் உறுதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share