ஹேப்பி நியூஸ்... கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்... ஜன.5ல் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்...!
ஜனவரி ஐந்தாம் தேதி கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல் பஸ்ட் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. இது ஏழை எளிய மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்கவும் பெரிதும் உதவியது.
அதிமுக ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது, ஆனால் கொரோனா தொற்று பரவிய 2020ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது.2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இத்திட்டத்தை மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அதிமுக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, திமுக அரசு அதிமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நிறுத்திவிட்டதாக பலமுறை விமர்சித்தார். 2024ஆம் ஆண்டில் கூட, புதிய கல்வியாண்டு தொடங்கும் போது லேப்டாப் வழங்குவதற்கான அறிவிப்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டி, மாணவர்களின் எதிர்பார்ப்பை திமுக அரசு ஏமாற்றுவதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: புரளும் பொய் வாக்குறுதிகள்... தொடரும் போராட்டங்கள்... திமுகவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை...!
இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இந்த நிலையில் 2026 ஜனவரி 5ஆம் தேதி கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகம் மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கான துவக்க விழா நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்கள் மடிக்கணினி பெற உள்ளனர்.
இதையும் படிங்க: அப்புறம் என்னப்பா... கலைஞர் அரசு போக்குவரத்து கழகம்- னு மாற்ற திட்டமா? H. ராஜா விளாசல்...!