விவசாயிகள் நலன் காக்க... நெல் ஈரப்பதத்தை உயர்த்துங்கள்... பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...!
நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில் அரசு நியாயவிலைக்கடைகள் மற்றும் மத்திய உணவுக் கிடங்குகளுக்கு நெல் கொள்முதல் செய்யும் போது, நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு மேல் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று மறுத்துவிடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பெரும் நஷ்டம் தான். நெல்லின் ஈரப்பத உச்சவரம்பை 17%லிருந்து 22% அல்லது 24% ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருவதற்கான முக்கியக் காரணம்.
தமிழகத்தின் புவியியல் மற்றும் காலநிலைத் தன்மை காரணமாக, குறிப்பாக குறுவை, சம்பா, தாளடி ஆகிய மூன்று பருவங்களிலும் நெல் அறுவடை செய்யப்படும் போது இயற்கையாகவே ஈரப்பதம் 20–24 சதவீதம் வரை இருக்கும். குறிப்பாக சம்பா பருவத்தில் (அக்டோபர்–பிப்ரவரி) வடகிழக்குப் பருவமழை பெய்து கொண்டிருக்கும். அறுவடைக்குப் பிறகு வெயிலே இல்லாமல் தொடர்ந்து மழையும் வானம் மேகமூட்டமாகவும் இருப்பதால், விவசாயிகளால் இயற்கையாகவே நெல்லை உலர்த்தி ஈரப்பதத்தைக் குறைக்க முடியாத நிலை உள்ளது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் அறுவடை கோடை மற்றும் இலையுதிர் காலத்தில் நடைபெறுவதால், கதிரவன் வெயில் நன்றாக இருக்கும். எனவே இயற்கையாகவே நெல்லை உலர்த்தி 14–15% ஈரப்பதம் வரை கொண்டு வர முடிகிறது. அதனால் அங்கு 17% என்ற வரம்பு பெரிய பிரச்சனையாக இல்லை. ஆனால் தமிழகத்தின் காலநிலை முற்றிலும் வேறுபட்டது.
இதையும் படிங்க: உதய் சோசியல் மீடியாவில் கிளுகிளுப்பு படங்கள்... "சொந்த மகனை திருத்த துப்பில்ல..." - ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சி.வி.சண்முகம்...!
இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 17% இருந்து 22% சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இதையும் படிங்க: SIR-னா என்னனே உதயநிதிக்கு தெரியல... மக்களை ஏமாத்தாதீங்க ஸ்டாலின்... நிர்மலா சீதாராமன் பதிலடி...!