சிலிண்டர் தட்டுப்பாடு... பெரும் பாதிப்பு அபாயம்... முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை..!!
சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. குறிப்பாக வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் சில இடங்களில் தட்டுப்பாடு தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சனைக்கு மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் மற்றும் பதற்றம் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக பெங்களூரு, சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் ஹோட்டல்கள், உணவகங்கள், டீ கடைகள் உள்ளிட்ட சிறு வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பெங்களூரில் ஹோட்டல்கள் சங்கம் ஏற்கனவே மார்ச் 10 முதல் பல உணவகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அறிவித்துள்ளது. சென்னையிலும் இதே நிலைமை உருவாகி வருவதாக சென்னை ஹோட்டல்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உடனடி நடவடிக்கை கோரியுள்ளது. வணிக சிலிண்டர்கள் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டதால், பல ஹோட்டல்கள் தங்கள் செயல்பாடுகளை குறைத்துள்ளன.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... தொகுதி பங்கீடு தீவிரம்... திமுக - சிபிஎம் பேச்சுவார்த்தை..!!
மேலும், மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் உணவு விலைகள் உயர்வு, டீ விலை உயர்வு போன்ற எதிரொலிகளும் தொடங்கியுள்ளன.இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தப் பிரச்சனையை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகள், எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உள்ளனர். வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் ஹோட்டல் உணவுகள் தயாரிப்பு பாதிக்கப்படும் என்றும் இதனால் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் எனவும் கூறி இந்த அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: தொடரும் பாலியல் வேட்டை... வாய் கூசாம வசனம் பேசுறீங்களே ஸ்டாலின்? பந்தாடிய வானதி சீனிவாசன்..!