×
 

விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ்... விண்ணப்பித்த அன்றே பயிர் கடன் திட்டம்! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு

விவசாயிகள் விண்ணப்பித்த அன்றே பயிர் கடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டின் பொருளாதார, சமூக, மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

இந்த ஆட்சியின் முக்கிய நோக்கம், "எல்லோருக்கும் எல்லாம்" என்ற திராவிட மாடல் ஆட்சியின் தத்துவத்தின் அடிப்படையில், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி, மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்டு செயல்படுவதாகும். கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாட்டின் பல துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்த முயற்சிகள் பல தரப்பினரால் பாராட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் 1,705 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் முடிவுற்ற திட்ட பணிகளையும் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையும் படிங்க: #BREAKING: தூய்மை பணியாளர்களை கைவிடமாட்டோம்! புதிய நலத்திட்டங்கள் காத்திருக்கு - முதல்வர் ஸ்டாலின்..!

512.52 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,144 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் 363 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற 1073 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அர்ப்பணித்தார். 

மேலும் விவசாயிகள் இணையவழியில் விண்ணப்பித்த அன்றே பயிர் கடன் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகள் விண்ணப்பித்தான்றி கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை கூட்டுறவு சங்கத்தில் பயனாளிகளுக்கு வழங்கி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். 

இதனை அடுத்து விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர் கடன் வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். 

இதையும் படிங்க: திருப்பூருக்கு மாஸ் அறிவிப்புகளை கொடுத்த முதல்வர்! என்னென்ன தெரியுமா? முழு விவரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share