"நான் முதல்வன்"..! சாதனையை அழிக்க முடியாது..! ஸ்டாலின் திட்டவட்டம்..!!
நான் முதல்வன் திட்டத்தின் சாதனையை அழிக்க முடியாது என ஸ்டாலின் திட்ட வட்டமாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முந்தைய தி.மு.க. அரசால் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரபலமான 'நான் முதல்வன்' திட்டத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை அரசியல் எதிர்ப்பாளர்களால் "முந்தைய அரசின் சாதனைகளை அழிக்கும் செயல்" என்று கடுமையாகக் கண்டிக்கப்பட்டு வருகிறது.
'நான் முதல்வன்' திட்டம் 2022 மார்ச் மாதம் அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிய ஒரு முக்கியமான திறன் மேம்பாட்டுத் திட்டமாகும். மாணவர்களுக்கு தொழிற்துறை தேவைக்கேற்ப திறன் பயிற்சி, போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டல், வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை வழங்கும் இந்தத் திட்டம், குறிப்பாக அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது நான் முதல்வன் திட்டத்திற்கு டிஎன் ஸ்கில்ஸ் என்று பெயர் மாற்றம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு திமுகவினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். நான் முதல்வன் என்று சொன்னாலே ஸ்டாலின் பெயர் தான் நினைவுக்கு வரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூட தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நான் முதல்வனின் சாதனைகளை மறைக்க முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!
நீங்கள் நான் முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம். ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன என்று கூறினார்.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன் என்றும் அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் நான் முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன் எனவும் கூறி உள்ளார். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!