×
 

பசும்பொன்னில் ரூ.3 கோடியில் தேவர் திருமண மண்டபம்… முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு…!

பசும்பொன்னில் மூன்று கோடி ரூபாய் மதிப்பிட்டு தேவர் திருமண மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதி அருகே அமைந்துள்ள சிறிய கிராமமான பசும்பொன்னில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி ஒரு மாபெரும் விழா நிகழ்கிறது. அது, சுதந்திர போராட்ட வீரரும், அரசியல் தலைவரும், ஆன்மீகவாதியுமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் விழா தேவர் ஜெயந்தி எனக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கர் தேவர் சிலைக்கு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

அவரைக் கொண்டு வந்து அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் பசும்பொன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கம் தேவனார் புகழைப் பேசினார். நாட்டின் விடுதலைக்காக தன்னையே ஒப்படைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்று புகழாரம் சூட்டினார். தேவருக்கு நினைவிடம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதி என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: நெருங்கும் SIR... அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு...!

அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் இளவல் போன்று காட்சி அளித்தவர் என் அண்ணாவால் போற்றப்பட்டவர் முத்துராமலிங்க தேவர் என்றார். வீரராக பிறந்தார், வீரராக வாழ்ந்தார், வீரராக மறைந்தார், ஏன் மறைந்தும் வீரராகவே வாழ்கிறார் முத்துராமலிங்க தேவர் என்றார். பசும்பொன்னில் மூன்று கோடி ரூபாயில் தேவர் திருமண மண்டபம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்டாலின் ஐயா! சொன்னீங்களே... செஞ்சிங்களா? நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்டு நயினார் விளாசல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share