கொள்கை நெறி தவறாதவர்..! சோ.மா.ராமசந்திரன் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து..!
முன்னாள் எம்.எல்.ஏ. சோ.மா. ராமச்சந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சோ.மா. ராமச்சந்திரன். அவரது பிறந்தநாளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வு தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கொள்கை நெறி தவறாத பாதையில், கடும் உழைப்பால் முன்னேறியவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நூறாண்டுகளைக் கடந்து கழகத்தின் மூத்த முன்னோடியாக நமக்கெல்லாம் திசைகாட்டியாக வாழ்பவருமான சோ.மா.இராமச்சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி பகுதியில் பிறந்து, பின்னர் சென்னையில் குடியேறி, தேநீர்க் கடை ஒன்றை நடத்தி, தனது உழைப்பால் உயர்ந்த அவர், திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கழகத்தில் இணைந்து பணியாற்றியவர்., மிசாவில் சிறை கண்டவர்., 30 ஆண்டுகாலம் பகுதிச் செயலாளர், ஒருமுறை சட்டமன்ற உறுப்பினர் என மக்கள் தொண்டாற்றி அண்ணா நகர் வாழும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: RTE திட்டத்திற்கான நிதி விவகாரம்..! திமுகவை நார் நாராக கிழித்த இபிஎஸ்..!
பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றவர் என்றும் தலைவர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டபோது, அவர்களது வெற்றிக்காகக் களப்பணியாற்றியவர் என்றும் கூறியுள்ளார். முன்னத்தி ஏராகக் கழகத்தினருக்கு வழிகாட்டும் சோ.மா.இராமச்சந்திரன் அவர்கள் நீடு வாழ்க பல்லாண்டு தனது வாழ்த்துக்களை முதலமைச்ச ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: “நவீன கோமாளி ஸ்டாலின்; ஒட்டுண்ணி ரகுபதி” - திமுகவை பங்கமாய் கலாய்த்த செல்லூர் ராஜூ!