×
 

ஐ.டி. துறையின் “POWER HOUSE” சென்னை… உலக புத்தொழில் மாநாட்டில் முதல்வர் பெருமிதம்…!

தொழில்நுட்பத் துறையின் பவர் ஹவுஸ் சென்னை என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தொழில்நுட்ப மற்றும் தொழில் மையமான கோவையில், கொடிசியா வணிக மேக்கள் காட்சி மையத்தில் இன்று முதல் தொடங்கி நாளை வரை நடைபெறும் உலக புத்தொழில் மாநாடு, உலகளாவிய அளவில் புதுமையும் தொடக்க நிறுவனங்களும் இணைந்து கொண்டாடும் ஒரு மாபெரும் நிகழ்வாக அமைகிறது. தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் சூழலை உலகளாவிய முதலீட்டாளர்களுடன் இணைப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு உள்ளது.

மேலும், புதுமைத்தனத்தை ஊக்குவித்து, துறை தாண்டிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பது., உதாரணமாக, ஆரோக்கியம், கல்வி, விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் AI மற்றும் பசுமை தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது. உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பது, குறிப்பாக பெண்கள் தொழில்முனைவோர், கிராமப்புற ஸ்டார்ட்அப்ஸ் மற்றும் சிறு தொழில்களை ஊக்குவிப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டை உலக ஸ்டார்ட்அப் மையமாக மாற்றும் ஒரு உத்தியாகவும் செயல்படுகிறது. 

கோவையில் நடக்கும் உலக புத்தொழில் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர், தமிழகம் அமைதியான மாநிலம் என்பதால் முதலீடுகள் குவிந்து வருவதாக தெரிவித்தார். 2030க்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: Breaking: மிருகத்தனமான பெல்ட் அடி! வலி பொறுக்காமல் அலறிய பிஞ்சு! காப்பகம் மூடல், உரிமையாளர் கைது!

புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள் தொழில்துறைக்குள் வரவேண்டும் என்று கூறினார். திராவிட மாடல் அரசு ஏராளமான முதலீடுகளை ஈர்த்துள்ளது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், வாய்ப்புகள் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்று தெரிவித்தார். தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும் தொழில்நுட்பத் துறையின் பவர் ஹவுஸ் ஆக சென்னை வளர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரு பாவமும் அறியாத பிஞ்சுகளை அடித்து துன்புறுத்தும் கொடூரம்... நெஞ்சை உலுக்கும் காட்சிகள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share