இலங்கைத் தமிழர்களுக்காக பிரதமருக்கு கடிதம்... பிரிவுக்கு இடமில்லை... முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!
பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் இரண்டாவது நாளாக நடைபெறும் அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஐலகத் தமிழர் தினத்தின் கொண்டாட்டமாக விருதுகளை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், வரலாறு காணாத வகையில் தமிழ்நாடு வளர்கிறது என்று கூறினார். நாடுகளும், கடல்களும் பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை இணைக்கிறது என்று தெரிவித்தார்.
திராவிட மாடல் அரசு அமைந்ததும் அயலக தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டதாக தெரிவித்தார். அயலக தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது அந்த நாடுகளை வளர்க்கவே என்றும் தாங்கள் வாழ்வதற்கு அல்ல எனவும் தெரிவித்தார். நம்மை யாராலும், எதனாலும் பிரிக்க முடியாது என்றும் பல்லாயிரம் ஆண்டு கால சொந்தம் என்றும் இன்னும் பல ஆண்டுகள் தொடர போகும் சொந்தம் என்றும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டை மறக்காதவர்கள் அயல்நாட்டு வாழ் தமிழர்கள் என்று குறிப்பிட்டார். அயலகத் தமிழர்கள் எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். வாழ்வதும், வளர்வதும் தமிழனும், தமிழமாய் இருக்க வேண்டும் என்பதே நோக்கம் என்றும் இலங்கையில் அறிமுகமாகும் புதிய அரசியலமைப்பு சட்டத்தால் தமிழர்களின் உரிமை பறிபோகக்கூடாது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெண்கள் பாதுகாப்பை களவாடும் திமுக கருப்பு சிவப்பு படை... ஆளுங்கட்சி திமிரா? நயினார் விளாசல்…!
பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்திருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2030-ம் ஆண்டு மனதில் வைத்து உங்க கனவை சொல்லுங்க என்ற திட்டத்தை தொடங்கி வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இனவெறி, மொழிவெறி நமக்கு கிடையாது என்றும் கூறியுள்ளார். நமக்குள் எந்த பிளவும் ஏற்படுவதற்கு அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்தார்
இதையும் படிங்க: திமுகவின் வாய்ச் சவடாலுக்கு தான் பேரறிஞர் அண்ணா தேவை... பூங்கா பெயர் மாற்றத்திற்கு இபிஎஸ் கண்டனம்...!