×
 

இந்த முறையும் திமுக ஆட்சி தான்... நம்ம சாதனைகளை வீடு வீடாக எடுத்துட்டு போகணும்... முதல்வர் ஸ்டாலின் உரை...!

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன், முத்தரசன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன் உட்பட ஏராளமானூர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் பழனியப்பன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட முதலமைச்ச ஸ்டாலின் அப்போது சிறப்புரையாற்றினார்.

சென்னை நேரும் விளையாட்டு அரங்கில் வெள்ளம் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடந்து முடிந்தது. தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்த பெண்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில், வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பேசினார். கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். வாக்குரிமையை காப்பாற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் திமுகவினர் சுழன்று சுழன்று பணியாற்றினோம் என்று தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை திமுக நிர்வாகிகளின் பணிகள் முடிவடையவில்லை என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெல்லும் தமிழ் பெண்கள் விழா கோலாகலம்... களைகட்டிய நிகழ்ச்சி...!

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவின் சாதனைகளை வீடு வீடாகக் கொண்டு சேர்த்து அவற்றை வாக்குகளாக மாற்ற வேண்டும் என்றும் கூறினார். தமிழ்நாட்டில் வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் திமுகவின் ஆட்சி தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் ஏழாவது முறையாக திராவிடம் மாடல் ஆட்சி தொடரும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: ஆட்சி அதிகாரத்தில் பங்கு! தராவிடில் தவெகவுடன் கூட்டணி!! அகல கால் வைக்கும் காங்கிரஸ்!! திமுகவுக்கு தீராத தலைவலி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share