×
 

அடிமை அதிமுக, ஒட்டுண்ணி பாஜக... தமிழ்நாட்டு மீனவர்கள்-னா எளக்காரமா? லெப்ட் ரைட் வாங்கிய முதல்வர்…!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்வதையே மதிய அரசு வேலையாக கொண்டிருக்கிறது என்றும் கச்சத்தீவை மீட்க இலங்கை அரசுக்கு கோரிக்கை வைக்க கூட மத்திய அரசு மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார். தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் பெயரில் உள்ள மத்திய அரசின் திட்டங்களுக்கு கூட மாநில அரசு தான் படி அளக்க வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவித்தார். மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு ஏதும் செய்யவில்லை என்றும் தமிழ்நாட்டை வஞ்சிப்பதை மத்திய பாஜக அரசு வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

குஜராத், மணிப்பூர், கும்பமேளா ஆகிய இடங்களுக்கெல்லாம் குடுவை அனுப்பாத பாஜக கரூருக்கு மட்டும் குழுவை அனுப்புகிறார்கள் என்றால் தமிழ்நாட்டின் மீதான அக்கறை இல்லை என்றும் அடுத்த ஆண்டு தேர்தல் வருவது தான் முக்கிய காரணம் எனவும் தெரிவித்தார். இதில் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா? என்றும் இதை வைத்து மிரட்டலாமா உருட்டலாமா என நினைப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

ஒட்டுண்ணியாக வாழ தான் பாஜக நினைப்பதாகவும், அவர்களோடு அதிமுக கூட்டணி வைத்துக்கொண்டு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு தலையாட்டி பொம்மையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். தவறு செய்தவர்கள் அத்தனை பேரும் அடைக்கலமாகி தவறுகளில் இருந்து தப்பிப்பதற்கான வாஷிங் மெஷின் தான் பாஜக என்று விமர்சித்தார்.

இதையும் படிங்க: பத்து ரூபா பாலாஜி… CBI வந்தா CONDITIONS FOLLOW பண்ணுவீங்களா? கிண்டலடித்த அதிமுக…!

அந்த வாஷிங் மிஷினில் குதித்து உத்தமர் ஆகிவிடலாம் என எடப்பாடி பழனிச்சாமி நினைப்பதாகவும், எப்படி அவரை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால் கூட்டத்திற்கு கூட்டம், மேடைக்கு மேடை, தெருவுக்குத் தெரு சென்று நம்முடைய கூட்டணிக்கு யாராவது வருவார்களா என்று அழைக்கும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதனால், அவர் தங்களுக்கு பிடிக்காதவர்களை விருப்பம் போல் திட்டிக் கொண்டிருப்பதாக கூறினார்.

தமிழ்நாட்டு நலன், திட்டங்கள் மீது அக்கறை கொண்ட யாரும் பாஜகவின் கூட்டணிக்கு போக மாட்டார்கள் என்றும் நாட்டு மக்களை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை முழு வீச்சில் செயல்படுத்தி கொண்டிருக்கும் கட்சி பாஜக என்றும் மூன்றாவது முறையாக மக்களுடைய ஆதரவு குறைந்து ஒரு சிலரின் ஆதரவோடு ஆட்சி அமைந்த பிறகு ஆர்எஸ்எஸ் பாதையில் வேகமாக நடை போட ஆரம்பித்திருக்கிறது பாஜக என்று கூறினார். பெருந்தலைவர் காமராஜரை கொல்ல முயற்சித்த ஆர்எஸ்எஸ் அமைப்போடு நூற்றாண்டில் அவர்களுடைய செயல் திட்டத்தை வேகமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: விளம்பரத்திற்காக விஜயோடு சண்டை! தி. மலை சம்பவம் கண்ணுக்கு தெரிலையா? விளாசிய காயத்ரி ரகுராம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share