×
 

சிவகங்கையில் 50 ஆயிரம் பேருக்கு பட்டா..! மீண்டும் DMK ஆட்சி தான்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி

சிவகங்கை மாவட்டத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதும் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

சிவகங்கை மாவட்டத்தில் 13.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சிவகங்கை மாவட்டத்திற்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சிவகங்கையில் ரூ. 2,559.50 கோடி மதிப்புள்ள 49 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது, சிவகங்கை மண்ணின் பெருமைகளை பறைசாற்றினார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாகரீகம் ஓங்கி இருந்ததற்கான கீழடி தடயங்கள் கிடைத்த மண் என்று தெரிவித்தார். வீரத்தால் தியாகத்தால் சிவந்த மண் சிவகங்கை என தெரிவித்தார். வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி உள்ளிட்டோரின் வீரத்தால் தியாகத்தால் சிவந்த மண் சிவகங்கை என்றும் கூறினார். மத்திய அரசால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கி 11 ஆண்டுகள் ஆகிறது என்றும் பல்லாண்டு அனுபவம் வாய்ந்த பா.சிதம்பரத்தின் பாராட்டை முக்கியமானதாக கருதுகிறேன் என கூறினார்.

சிவகங்கை மாவட்டத்தில் 2.38 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெறுகின்றனர். 8,450 மாணவிகளுக்கு புதுமை திட்டத்தின் கீழ் மாதம் 1000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்றும் கூறினார். சிவகங்கையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 12 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர் எனவும் நான்கு ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு சிவகங்கையில் மட்டும் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பேரறிஞர் அண்ணா நினைவு நாள்..! முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி..! திமுக முக்கிய அறிவிப்பு..!

சிவகங்கையில் 65 கோவில்களில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளது என்றும் அடுத்தும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என திட்டவட்டமாக தெரிவித்தார். தற்போது அடிக்கல் நாட்டியுள்ள பணிகளை மீண்டும் வந்து திறந்து வைப்பேன் என தெரிவித்துள்ளார். தமிழகத்தை விமர்சிக்க கூடிய ஆளுநர் கேள்விகளை மத்திய அரசிடம் தான் கேட்க வேண்டும் என்றும் மத்திய அரசின் பொருளாதார அறிக்கையில் தமிழக அரசை பாராட்டியுள்ளதாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க: சிவகங்கையில் ரூ.100 கோடி செலவில் சட்டக் கல்லூரி... திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share