காலநிலை முன்னெச்சரிக்கையில் தமிழ்நாடு நம்பர்.1... முதல்வர் ஸ்டாலின் உரை...!
தமிழ்நாட்டின் வளர்ச்சி ஒரு கண் என்றால் சுற்றுச்சூழல் மற்றொரு கண் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி ஒன்று குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தமிழ்நாட்டின் வளர்ச்சி ஒரு கண் என்றால் சுற்றுச்சூழல் மற்றொரு கண் என தெரிவித்தார்.
சென்னையில் தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது.காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசித்தார். காலநிலை பாதிப்புகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது தொடர்பாகவும் உன்னை எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசித்தார்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், காலநிலை மாற்றம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக முன்னோடியாக உள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பெண்களின் பங்கு அளப்பரியது என்றும் பெண்களுக்கான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது எனவும் தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: மோடி, அமித்ஷா முகத்தில் அறைந்த தீர்ப்பு! நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து கார்கே மகிழ்ச்சி!
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சுற்றுச்சூழல் மாற்றங்கள் தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். பசுமை பள்ளி வகுப்பறைகளில் வெப்பநிலையை குறைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் வளர்ச்சி ஒரு கண் என்றால் சுற்றுச்சூழல் என்பது மற்றொரு கண் எனக் கூறினார். அலையாத்தி மரக்காடுகளின் பரப்பளவு இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.
இதையும் படிங்க: வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்... பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு...!