×
 

ADMK வை அமித்ஷாவிடம் சரண்டர் செய்த EPS... தப்பு கணக்கு போடுது பாஜக..! முதல்வர் விமர்சனம்...!

வாக்காளர் சிறப்பு திருத்தத்தின் மூலம் வெற்றி பெறலாம் என பாஜக தப்பு கணக்கு போடுவதாக முதல்வர் தெரிவித்தார்.

மாமல்லபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், எம் எல் ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் என 2500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது வாக்காளர் சிறப்பு திருத்தம் மூலம் வெற்றி பெறலாம் என தப்பு கணக்கு போடுகிறது பாஜக என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

பாஜக காணும் பகல் கனவு திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். ஒவ்வொரு தொண்டனையும் உழைக்க சொன்னதாக சொல்லுங்கள் என்றும் அவர்களை நம்பி தான் நான் இருக்கிறேன் என்றும் சொல்லுங்கள் என வாக்குச்சாவடி பயிற்சி கூட்டத்திற்கு வந்தவர்களிடம் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

தொண்டர் இருக்கிற தைரியத்தில் தான் தலைவர் இருக்கிறார் என்று மறக்காமல் சொல்லுங்கள் என்று முதல்வர் தெரிவித்தார். பெயர் அளவிற்காவது திராவிட கட்சியாக இருந்த அதிமுகவை முழுவதுமாக அமித் ஷாவிடம் சரண்டர் செய்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்தார். அதிமுக வைத்துள்ள கூட்டணியை தமிழக மக்கள் மட்டுமல்ல அவர்கள் கட்சியினரே விரும்பவில்லை என்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிறார்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் வருகிறார்கள், காங்கிரஸ் வருகிறார்கள் என இபிஎஸ் தினமும் சொல்லிப் பார்த்தார் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: தவெக செய்த தகிடுதத்தம்... ரூ.20 லட்சத்தை விஜய்க்கே திருப்பி அனுப்பிய கணவரை இழந்த பெண்...!

இபிஎஸ் தினம்தோறும் அழைத்தும் எந்த கட்சியும் அதிமுக பக்கம் செல்லவில்லை எனவும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் ஐந்து ஆண்டு காலம் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை நாசம் செய்யும் கூட்டத்தை வீழ்த்துவோம் என்று முதல்வர் சூளுரைத்தார். தமிழ்நாட்டை கபளிகரம் செய்து நாசம் செய்யும் திட்டமிடும் கூட்டத்தை வேரோடும் வீரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க: அடக்கொடுமையே... எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு... மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் விஜய் அரங்கேற்றிய அவலம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share