ஆட்சியில் பங்கு ஒத்து வராது… அது காங்கிரசுக்கே தெரியும்..! முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!
ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் இப்போது 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள சில கட்சிகள் "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற கோரிக்கையை முன்வைத்து பேசி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் இதை மிகவும் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இப்போது 40 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளை எதிர்பார்ப்பதோடு, வெற்றி பெற்றால் அமைச்சரவையில் சில பதவிகளைப் பெற வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். இது திமுகவுக்கு புதிய சவாலாக எழுந்துள்ளது. இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் அண்மையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இதே கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளார்.
அவர்களது கட்சி தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்தாலும், வெறும் தொகுதி ஒதுக்கீடு மட்டுமே போதாது, ஆட்சி நிர்வாகத்தில் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இது போன்ற சம்பவங்கள் திமுக கூட்டணியின் இடையே பிளவை ஏற்படுத்தும் என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், ஆட்சியில் பங்கு என்ற கூட்டணி கட்சியினரின் கோரிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது... கண்டிஷன் போட்ட கவுன்சிலர்..! குக்கர்ல விசில் அடிக்கலாமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்தை பொறுத்தவரை ஒத்து வராது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது திமுகவுக்கும் தெரியும் காங்கிரசுக்கும் தெரியும் என தெரிவித்தார். திமுகவும் காங்கிரசும் இணைந்து வரும் தேர்தலை சந்திக்கும் என்றும் கூறினார். திமுக காங்கிரஸ் கூட்டணி அரசியலை தாண்டி தன்னுடைய சகோதரரை போன்றவர் ராகுல் காந்தி என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். கூட்டணியில் முடிவை ஏற்படுத்த சிலர் சதி செய்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொடுமை..! மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறை... திமுகவை கண்டித்த சீமான்..!