×
 

சாதனைக்கு மேல் சாதனை..! 2.0 திராவிட மாடல் அசரவைக்கும்..! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை சட்டப்பேரவையில் பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கவலையும் இருந்ததை மறைப்பதற்கு இல்லை என்று தெரிவித்தார். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்தது என்று தெரிவித்தார். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதே தனது மகிழ்ச்சிக்கு காரணம் என்றும் கூறினார். ஐந்து ஆண்டு கால ஆட்சி முடிவுறும் நிலையில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தை அந்நார்ந்து பார்ப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். என்னுடைய வெற்றி இலக்கை நான் வென்றுவிட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார். மகளிர் விடியல் பயணத்தில் பெண்கள் தோராயமாக 60 ஆயிரம் ரூபாய் சேமித்துள்ளனர் என்று கூறியுள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஒவ்வொரு பெண்களுக்கும் ரூபாய் 29 ஆயிரம் தொகை வழங்கு இருப்பதாக கூறினார். உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழக மக்கள் பயில்வதாகவும், திமுக ஆட்சி மீண்டும் அமையும் போது எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து இருப்பதாகவும் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசின் திட்டங்களை அடுத்தடுத்து பட்டியலிட்டு பதிலுரை வழங்கினார். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், முக்கிய தலைவர்களுக்கு மணிமண்டபங்கள் மற்றும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இடியாப்ப சிக்கல் என்ற நிலையில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த நிலையிலும் இலக்கை வென்றதில் மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் இரண்டு லட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மத்திய அரசு தமிழகத்திற்கு இழைத்த துரோகங்கள்... லிஸ்ட் போட்ட DMK..!

ஆட்சி பொறுப்பேற்று எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்சிகளில் கலந்து கொண்டிருப்பதாகவும், சென்னை தவிர மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டு இருப்பதாகவும், 5 ஆண்டுகளாக மக்களுக்காக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்ந்தார் என்றும் தெரிவித்தார். ஆளுநர் தான் இருக்கும் பதவியை அவரை மறந்து விட்டார் என்றும் விமர்சித்தார். அவருடைய பதவியை அவரே அவமானப்படுத்தி கொள்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் மீதும் நாட்டு பண் மீதும் அளவற்ற மரியாதை கொண்டவர்கள் தாங்கள் எனவும் அரசு தயாரித்த உரையை படிக்காத ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு எதிரானது என்றும் கூறினார். யாரும் தேச பக்தி குறித்து தங்களுக்கு பாடம் எடுக்கும் அளவிற்கு தாங்கள் இல்லை என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: ஷாக்க கொர..! சிங்கத்தைப் பார்த்து சிறு நரிகளுக்கு அல்லு.! அலறுது அறிவாலயம்.. விளாசிய நயினார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share