மயிலாடுதுறையின் மருமகன் நான்..! பல கோடி மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் உரை..!
மயிலாடுதுறையின் மருமகனாக வந்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெருமை கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மயிலாடுதுறை சென்றார். 48. 17 கோடி செலவிலான 47 முடிவுற்ற பணிகளை அவர் திறந்து வைத்தார். மேலும் 271 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து, 54 ஆயிரத்து 461 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரச நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், கச்சத்தீவை தாரை வார்த்து விட்டதாக தொடர்ந்து அரசியல் பேசி வருவதாக தெரிவித்தார். கச்சத்தீவை தாரை பார்ப்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒன்று என்றும் அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார். கச்சத்தீவு மீட்க கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், கச்சத்தீவு பிரச்சனையில் பிரதமர் முடிவு நேரடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் செய்யப்பட்ட நலத்திட்டங்கள் தொடர்பாக பட்டியலிட்டார். மயிலாடுதுறையின், மருமகனாக வந்திருந்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெருமை கொள்கிறேன் என்று கூறினார். நேற்று கொட்டும் மழை ஏழும் தன் மீது மக்கள் அன்பு மழை பொழிந்ததாக பெருமிதம் தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்களை நேரில் சந்தித்த தேவைகளை உணர்ந்து செயல்படும் அரசாக நான்கு ஆண்டு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டு பேசிய முதலமைச்சர், அனைத்து மாவட்டத்திற்கும் சீரான, சமமான திட்டங்களை பார்த்து பார்த்து வழங்கி வருவதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வாயை திறந்தாலே பொய்! நிரந்தரமா குட்பை சொல்ல போறாங்க... இபிஎஸ்ஐ வகுந்தெடுத்த ஸ்டாலின்
இதையும் படிங்க: களத்தில் முதல்வர்! வீடு வீடாகச் சென்று பரப்புரை...பரபரக்கும் தேர்தல் களம்