×
 

ஸ்டாலினே மீண்டும் முதலமைச்சர்... வரும் 14ல் மாபெரும் திமுக கூட்டம்... உதயநிதி அறிவிப்பு...!

ஸ்டாலினே மீண்டும் முதலமைச்சர் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதிப்பட கூறினார்.

வரும் 14ஆம் தேதி 1.30 பேர் கலந்து கொள்ளும் திமுக கூட்டம் நடைபெற இருப்பதாக துணை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 75 ஆண்டுகளைக் கடந்து, தமிழர்களின் மேம்பாட்டை முன்னிறுத்தி தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பது, கழக இளைஞர் அணி என்று கூறினார்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைகளைத் திசையெங்கும் கொண்டு செல்லும் கருத்தியல் பணிகள் ஒருபுறம், கட்டமைப்பை வலுப்படுத்தி கழகத்தின் வெற்றிகளுக்குத் துணைநிற்கும் அரசியல் பணிகள் இன்னொருபுறம் என்று இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கிறது இளைஞர் அணி என தெரிவித்தார். 

மாநிலம், மாவட்டம், மாநகரம், பேரூர், ஒன்றியம், கிளை, வட்டம் என்று தமிழ்நாட்டின் எல்லாத் திசைகளிலும் வேர்விட்டிருக்கிறது கழக இளைஞர் அணி., வழக்கமான நிர்வாக அமைப்புடன் இந்த ஆண்டு இரண்டு புதிய முன்னெடுப்புகளையும் கழக இளைஞர் அணி மேற்கொண்டிருக்கிறது என தெரிவித்தார். 

இதையும் படிங்க: விஜய்க்கு எல்லாம் ஓட்டு விழும்ன்னு கனவுல கூட நினைக்காதீங்க... திமுகவில் இணைந்த P.T. செல்வகுமார் விமர்சனம்...!

நியமிக்கப்பட்ட 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம்தோறும் நிர்வாகிகள் சந்திப்பை நடத்த வேண்டும் என்ற கழகத் தலைவர் உத்தரவின்பேரில், முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பை 14.12.2025, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். 

1.30 லட்சம் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் கூடும் பிரமாண்ட நிகழ்ச்சியாக நடக்கவிருக்கும் இந்த வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பில் முதலமைச்சர் அவர்கள் சிறப்புரை ஆற்றவிருக்கிறார் என்றும் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத் தலைவரே மீண்டும் முதலமைச்சர் ஆவார், திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்னும் வெற்றிச் செய்திக்கு அடித்தளமாக இந்த இளைஞர் அணி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு அமையும் என்பது உறுதி என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: நிர்கதியான நீர் மேலாண்மை... இதுதான் தமிழக நிலைமை... நயினார் நாகேந்திரன் ஆவேசம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share