கோட்டத்தையே கொண்டாட்டமாக மாற்றிய அறிவுத் திருவிழா… முதல்வர் வருகை பெருமகிழ்ச்சி… உதயநிதி பெருமிதம்..!
வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் புத்தக கண்காட்சியை பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலின் வருகை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
முற்போக்கு புத்தகக் கண்காட்சி என்பது தமிழகத்தின் முற்போக்கு அரசியல், சமூக, இலக்கிய சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு தொடர்ச்சியான முயற்சி. இது திராவிட இயக்கத்தின் சார்பில், குறிப்பாக தி.மு.க. இளைஞரணியின் ஏற்பாட்டில் நடத்தப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு இதன் தொடக்கத்தில், தி.மு.க.யின் 75ஆம் ஆண்டு விழாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் திறப்புரையுடன் சிறப்பித்தது. நாம் வெறும் அறிவிப்புகளால் ஆட்சிக்கு வந்ததில்லை., உழைப்பும் அறிவும் தான் நமது வெற்றியின் ரகசியம் என்று அவர் உரையில் வலியுறுத்தியது போல, இந்தக் கண்காட்சி தமிழக அரசின் சமூகநீதி, கல்வி மேம்பாட்டு கொள்கைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டத்தின் பிரமாண்டமான அரங்கில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, சுமார் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளைக் கொண்டுள்ளது. இவற்றில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 10,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் குவிந்துள்ளன. முற்போக்கு சிந்தனையின் சாரமான சமூகவியல், அரசியல், பெண்ணியம், சுற்றுச்சூழல், வரலாறு தொடர்பான நூல்கள் பெரும்பான்மையாக உள்ளன.
இதையும் படிங்க: SIR-னா என்னனே உதயநிதிக்கு தெரியல... மக்களை ஏமாத்தாதீங்க ஸ்டாலின்... நிர்மலா சீதாராமன் பதிலடி...!
இந்த அறிவு சார் புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார். புத்தகக் கண்காட்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். வள்ளுவர் கோட்டத்தில், கடந்தவாரம் திமுக 75 அறிவுத்திருவிழாவைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவு நாள நாளான இன்று முற்போக்கு புத்தகக் காட்சிக்கு வருகை தந்ததாகவும் ஒவ்வொரு அரங்காக சென்று, 2 மணி நேரத்திற்கு மேல் செலவிட்டு, தேர்ந்தெடுத்து நிறைய புத்தகங்களை, தன் நூலகத்திற்காக வாங்கினார் என்றும் தெரிவித்தார்.
ஒருவார காலம் மிக சிறப்பான வரவேற்புடன் கோட்டத்தையே கொண்டாட்டமாக மாற்றி இருக்கும் இந்த அறிவுத்திருவிழா, முதலமைச்சர் ஸ்டாலின் வருகையால், மேலும் உற்சாகம் பெற்றுள்ளது., வாசகர்கள் அனைவரும் நிறைவுவிழாவில், பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை... பைனல் லிஸ்ட் ரெடி...! துணை முதல்வர் சொன்ன குட் நியூஸ்...!