×
 

"கட்சியிலிருந்து நீக்கம்"..! பத்து வருஷ உழைப்புக்கு கிடைச்ச பரிசு..! MLA காமராஜ் ஆதங்கம்..!

அமமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எம்எல்ஏ காமராஜ் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கடந்த பத்து ஆண்டு காலமாக உழைத்த உழைப்புக்கு கிடைத்த பரிசாக இந்த கட்சியில் இருந்து நீக்கத்தை எடுத்துக் கொள்வதாக எம்எல்ஏ காமராஜர் ஆதங்கத்தோடு கருத்து தெரிவித்தார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்எல்ஏ காமராஜ் என்று சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். முதல்வர் விஜய் நல்லாட்சி தர வேண்டும் என்றும் தமிழ்நாட்டு இளைஞர்கள் மட்டும் அல்ல அது தாங்களும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து இருப்பதாக முதல்வர் விஜய்க்கு புகழாரம் சூட்டியிருந்தார்.

தனது முழு ஆதரவை எம்எல்ஏ காமராஜர் தெரிவித்த நிலையில் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து விளக்கப்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: துரோகம் பண்ணிட்டீங்க..! MLA காமராஜ் கட்சியிலிருந்து நீக்கம்..! TTV தினகரன் அறிவிப்பு..!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் S.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது என்பதால் S.காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகாலமாக அமமுகவிற்கு உழைத்தேன் என்றும் அதற்கு கிடைத்த பரிசாக கட்சியிலிருந்து நீக்கத்தை எடுத்துக்கொள்கிறேன் எனவும் எம்எல்ஏ காமராஜ் தெரிவித்தார். தலைமை முடிவு எடுக்கும்போது கட்டுப்பட்டுத்தான் ஆகணும் என்றும் ஒன்றும் வருத்தமில்லை எனவும் அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எம்எல்ஏ காமராஜ் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: #BREAKING: துரோகம் பண்ணிட்டீங்க..! MLA காமராஜ் கட்சியிலிருந்து நீக்கம்..! TTV தினகரன் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share