×
 

MLA மார்க்கண்டேயன் ஜாமின் மனு தள்ளுபடி..! தலையில் இடியை இறக்கிய தூத்துக்குடி கோர்ட்..!!

எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் குறித்து விமர்சித்து பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில், திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், முதல்வர் விஜயை விமர்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் அதிகாலை, விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் கைது செய்தனர். மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. 

இதையும் படிங்க: மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

எம்எல்ஏ மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கேட்டது. அதே வேளையில் எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜாமீன் மறுக்கப்பட்டதால் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயின் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார். இரண்டு மனுக்களையும் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share