அரசியலில் புதுமுகங்கள்... MLA- களுக்கு SPECIAL TRAINING..! தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..!!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் ஜூன் 16-ஆம் தேதியான இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. இந்த முக்கிய பயிற்சி முகாமை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்த பிறகு, பல புதுமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசியல் அனுபவம் குறைவானவர்கள் என்பதால், சட்டப்பேரவை நடைமுறைகள், விதிமுறைகள், உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விரிவான பயிற்சியை ஏற்பாடு செய்ய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னெடுப்பு எடுத்தார்.
இந்தப் பயிற்சியை முதல்வர் விஜய் தொடங்கி வைத்ததன் மூலம், புதிய உறுப்பினர்களுக்கு சட்டமன்ற செயல்பாடுகளில் திறம்பட ஈடுபட உதவும் நோக்கம் வலியுறுத்தப்பட்டது. கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஜூன் 16 மற்றும் 17 ஆகிய 2 நாட்கள் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.
இதையும் படிங்க: மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!
பேரவையில் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானம், மசோதாக்கள் மீதான விவாதங்கள், நிதிநிலை அறிக்கை தொடர்பான கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் விளக்கப்படுகின்றன. மேலும், மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் எவ்வாறு முன்வைப்பது, அரசின் கவனத்திற்கு எப்படிக் கொண்டு செல்வது, சட்டமன்ற மரபுகளைப் பின்பற்றுவது போன்ற முக்கிய விஷயங்களும் பயிற்சியில் இடம்பெறுகின்றன.
இதையும் படிங்க: எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!