×
 

டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்... பிரதமர் வீடு முற்றுகை... திட்டவட்டம்...!

டெல்லிக்கு செல்லும் விவசாயிகள் பிரதமர் மோடியை விட்டு முற்றுகை விட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு, விவசாய சங்க தலைவர் நாகை காவிரி தனபாலன், தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி உள்ளிட்டோர் திருச்சியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஐயாகண்ணு, காவிரியில் மாதம்தோறும் நீர் பங்கீடு செய்வது நிறுத்தி தினம்தோறும் நீர் பங்கீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மரபணு திருத்தப்பட்ட பயிர்களை ஊக்குவிப்பதற்கு 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கு கண்டனம் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்புத்தூர் வரவுள்ள பிரதமர் மோடியை கண்டித்து கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்றும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. தனிநபர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17ஆம் தேதி நூற்றுக்கணக்கான விவசாயிகள் திருச்சியில் இருந்து டெல்லி செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம்... நிலைகுலையும் நெல்முட்டைகள்.. நயினார் எச்சரிக்கை...!

டெல்லிக்கு சென்று பிரதமர் வெயிட்டிங் முற்றுகை எட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் பீகார் தேர்தலில் கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் வரும் ஜனவரி மாதம் கள் விடுதலை மற்றும் மதுவிலக்கு மாநாடு நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தென்னை விவசாயிகள் பெருமூச்சு… வாடல் நோயை கட்டுப்படுத்த குழு..! அண்ணாமலை பெருமிதம்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share