×
 

இதுதான் ரைட் டைம்! அதிகரிக்கிறது முதலீட்டு வாய்ப்புகள்! பிரதமர் மோடி சொன்ன குட் நியூஸ்!

இந்தியாவி்ல் மொபைல் போன் முதல் எலக்ட்ரானிக்ஸ் வரை முதலீட்டு வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மொபைல், மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் பெருகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஆசியாவின் முன்னணி டிஜிட்டல் தொழில்நுட்ப கண்காட்சியான 9-வது இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2025-ஐ டில்லியில் தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், இந்தியாவின் ஜனநாயக அமைப்பு, வரவேற்கும் அரசு கொள்கைகள் மற்றும் எளிமையான வணிகச் சூழல் முதலீட்டாளர்களுக்கு சிறந்த இடமாக இந்தியாவை மாற்றியுள்ளதாகக் கூறினார்.

மொபைல் காங்கிரஸ்: இந்தியாவின் டிஜிட்டல் முன்னேற்றம்
அக்டோபர் 8 முதல் 11 வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி, மொபைல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது. "இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம். 2025 ஆம் ஆண்டு பெரிய சீர்திருத்தங்களின் ஆண்டாக இருக்கும்" என்று மோடி உறுதியளித்தார். 

இதையும் படிங்க: அடுத்தவனை ஏன் நம்பி இருக்கணும்! Chip முதல் Ship வரை இங்கேயே தயாரிப்போம்! மோடி மாஸ்டர் ப்ளான்!

கடந்த மாதம் மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் மூலம் ஷாம்பு முதல் தொலைக்காட்சி வரை பொருட்கள் மலிவாகியுள்ளதாகவும், இது முதலீட்டு சூழலை மேம்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

டிஜிட்டல் இந்தியாவின் முன்னேற்றம்
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் துறை அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது. "இந்தியாவில் 1 ஜிபி வயர்லெஸ் டேட்டா ஒரு கோப்பை தேநீரை விட மலிவானது. டிஜிட்டல் இணைப்பு இப்போது ஆடம்பரமல்ல, ஒவ்வொரு இந்தியனின் வாழ்விலும் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது" என்று மோடி பெருமையுடன் கூறினார். இந்தியாவின் இளம் மற்றும் வேகமாக வளரும் மக்கள்தொகை, முதலீட்டாளர்களுக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழில்முனைவோருக்கு அழைப்பு
குறைக்கடத்திகள், மொபைல்கள், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருவதாக மோடி குறிப்பிட்டார். "தொழில்துறையினர், கண்டுபிடிப்பாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இப்போது முன்னேற வேண்டிய தருணம். அரசு சீர்திருத்தங்களின் வேகத்தை அதிகரித்து, வணிகச் சூழலை மேம்படுத்தி வருகிறது" என்று அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி, உலகளாவிய தொழில்நுட்ப மையமாக இந்தியாவை மாற்றுவதாகவும் அவர் கூறினார்.

இந்திய மொபைல் காங்கிரஸ் 2025, இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் முக்கிய தளமாகும். பிரதமர் மோடியின் உரை, முதலீட்டாளர்களுக்கு இந்தியாவை ஒரு கவர்ச்சிகரமான இடமாக முன்னிறுத்தியுள்ளது. இந்தியாவின் எளிமையான வணிகக் கொள்கைகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி, உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களை இந்தியாவை நோக்கி ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி! காங்., செய்ததை விட 16 மடங்கு அதிகம்! அருணாச்சலுக்கு அள்ளிக் கொடுத்த மோடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share