×
 

உலக அளவில் மாஸ் காட்டிய பிரதமர்!! சீனா மீட்டிங்கில் மோடி தான் ஹைலைட்!!

பிரதமர் மோடியின் சீனப் பயணத்திற்கு முக்கியத்துவம் அளித்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் முன்னணி இணையதளங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

நம்ம பிரதமர் மோடி சீனாவுல போய் என்னமா மாஸ் காட்டியிருக்கார்! ஏழு வருஷமா சீனாவுக்கு போகாம இருந்தவர், இப்போ டியான்ஜின் நகரத்துல நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்கு (எஸ்.சி.ஓ) போய், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடினோட பேசி, அமெரிக்காவோட கட்டுப்பாட்டு வரி உயர்வுக்கு செம பதிலடி கொடுத்திருக்கார். 

ராய்ட்டர்ஸ், தி கார்டியன், சிஎன்பிசி, வாஷிங்டன் போஸ்ட் மாதிரி அமெரிக்க, இங்கிலாந்து வெப்சைட்ஸ் எல்லாம், “மோடியின் சீனா விசிட் பட்டைய கிளப்புது, இந்தியா-சீனா உறவு புது டர்ன் எடுக்குது”னு எழுதி தள்ளியிருக்காங்க. இது இந்திய-சீன உறவுக்கு புது உயிர் கொடுக்குமா, இல்ல அமெரிக்காவோட டென்ஷனை இன்னும் கூட்டுமானு உலக அரசியல்ல பெரிய பேச்சா இருக்கு.

மோடி ஆகஸ்ட் 30-ஆம் தேதி டியான்ஜின்ல இறங்கி, அங்க இருக்குற இந்தியர்களோட செம வெல்கம் வாங்கினார். 2020 கால்வான் மோதலுக்கு அப்புறம் இந்திய-சீன உறவு குளிர்ந்து போயிருந்தது. ஆனா இப்போ அமெரிக்காவோட 50% கட்டுப்பாட்டு வரி அறிவிப்பு, ரஷ்ய எண்ணெய் வாங்கறது பத்தி அமெரிக்கா கடுப்பு, இதெல்லாம் இந்தியாவை சீனா, ரஷ்யாவோட நெருக்கமாக்குது. ராய்ட்டர்ஸ் சொல்லுது, “மோடியோட சீனா விசிட், அமெரிக்காவுக்கு செம டென்ஷன், பீஜிங்குக்கு இராஜதந்திர வெற்றி”னு. தி கார்டியன், “மோடி-புடின் மீட்டிங், அமெரிக்காவோட வரி உயர்வுக்கு எதிரான பதிலடி”னு எழுதியிருக்கு.

இதையும் படிங்க: பொறுப்பை தட்டிக் கழிப்பதில் ஸ்டாலின் தான் BEST...எடப்பாடி சரமாரி தாக்கு

மாநாட்டுல மோடி-ஜி ஜின்பிங் பேச்சு செம ஹைலைட். “நாம ரெண்டு பேரும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவங்க, எல்லை தாண்டி வர்ற பயங்கரவாதத்துக்கு எதிரா ஒண்ணு சேர்ந்து போராடணும்”னு மோடி தெறிக்க விட்டார். பஹல்காம் தாக்குதல் பத்தி, “இரட்டை முகத்தோட இல்லாம ஒண்ணா இருக்கணும்”னு சொன்னார்.

ஜி ஜின்பிங், “யானையும் ட்ராகனும் ஒண்ணா இணையனும், எல்லையில அமைதி வேணும்”னு பேசினார். வணிக பற்றாக்குறைய குறைக்க, நேரடி விமான சேவைய மறுபடி ஆரம்பிக்க, முதலீடு அதிகரிக்க பேச்சு நடந்துச்சு. சிஎன்பிசி சொல்லுது, “இந்தியாவோட சீனா+1 உத்தி தொடருது, ஆனா 99.2 பில்லியன் டாலர் வணிக பற்றாக்குறை இருக்கு”னு.

புடினோட சந்திப்பு இன்னும் சுவாரசியம்! “உக்ரைன் போர் சீக்கிரம் முடியணும்”னு மோடி சொன்னார். புடின், “இந்திய-ரஷ்ய உறவு செம வலுவா இருக்கு”னு புகழ்ந்து, டிசம்பர்ல இந்தியா வரேனு உறுதிப்படுத்தினார். டியான்ஜின் அறிக்கையில பாகல்காம் தாக்குதலை கண்டிச்சு, பயங்கரவாதத்துக்கு எதிரா ஒண்ணு சேரணும்னு சொல்லியிருக்கு. 

இந்த விசிட், இந்திய வெளியுறவு கொள்கையில புது பக்கத்தை ஆரம்பிக்குதா? உலக ஊடகங்கள் மோடிய மையமா வச்சு பேச ஆரம்பிச்சாச்சு! மோடி ட்வீட்டுல, “பயனுள்ள பயணம், முக்கிய விஷயங்கள் பேசப்பட்டது”னு சொல்லி திரும்பிட்டார். இந்த சீனா விசிட், உலக அரங்கத்துல இந்தியாவோட தனி முத்திரைய பதிச்சிருக்கு!

இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு... கிரீன் சிக்னல் கொடுத்த செங்கோட்டையன்... எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share