நாளைக்கு தான் ஆட்டமிருக்கு... மோன்தா தீவிரப்புயலாக வலுவடையும்... தென் மண்டல தலைவர் அமுதா முக்கிய தகவல்...!
மோன்தா புயல் நாளை காலை தீவிரப்புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார்.
புயல் நிலவரம் மற்றும் மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா பேட்டி அளித்தார். அப்போது, மோன்தா புயல் 17 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவித்தார். மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த புயல் தற்போது வேகம் குறைந்து 17 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது என்றார். சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே 450 km தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது என தெரிவித்தார்.
புயல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை தீவிர புயலாக வலுபெறும் என்றும் தெரிவித்துள்ளார். மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு இடையே தீவிரப்புயலாக கரையை கடக்கக்கூடும் என்று கூறினார். புயல் கரையைக் கடக்கும் போது தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: தீவிர புயலாக வலுப்பெறும் 'மோன்தா'..!! வரும் 28ம் தேதி கரையை கடக்கும்..!!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். மேலும், தமிழகம், புதுவை காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அக்.27ம் தேதி வங்கக்கடலில் உருவாகும் 'மோன்தா' புயல்..!! சென்னையை நெருங்கும் ஆபத்து..?? வானிலை சொல்வது என்ன..?