×
 

பகீர் வானிலை அலர்ட்… இன்று மாலையே உருவாகிறது மோன்தா புயல்… எச்சரிக்கை…!

தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக வலுப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், வட தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் எச்சரித்தது. 

வங்கக்கடலில் உருவாகும் மோன்தா காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் கன மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு நாளை ஆரஞ்சு அலர்டும் கொடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் நேற்று சென்னையிலிருந்து 950 km தொலைவில் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது. 

ஆறு மணி நேரமாக 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் மோன்தா புயல் உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டது. சென்னைக்கு தென்கிழக்கு 790 கிலோமீட்டர் தொலைவில் புயல் சின்னம் இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டது. புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனிடையே, தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலையே புயலாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் உருவாகிறது மோன்தா புயல் ... சென்னையை நெருங்கி வருவதால் எச்சரிக்கை...!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் என அறிவித்திருந்த நிலையில் இன்று மாலையே புயலாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் புயலாக மாறும் என்றும் ஆழ்ந்த காற்றழுத்தம் புயலாக மாறி வடக்கு- வட மேற்கு நோக்கி நகர்ந்து 28ஆம் தேதி காலைக்குள் தீவிர புயலாக வலுபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நெருங்கும் மோன்தா CYCLONE... தப்புமா சென்னை?.. வானிலை மையம் முக்கிய அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share