அன்னையின் தியாகத்திற்கு ஈடில்லை... CM ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அன்னையர் தின வாழ்த்து..!
அன்னையர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு இன்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையின் தியாகத்தை போற்றும் இந்நாளில் பலர் தங்கள் தாயிடம் ஆசிர்வாதம் பெறுவதோடு, அவர்களுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்விக்கின்றனர்.
இந்நிலையில் அன்னையர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் தாயார் தயாளு அம்மாளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கண்ணீர் விடாத கொடுமையாய் புலம்பிய உ.பி.க்கள்.. திமுக அமைச்சர்களுக்கு பறந்த கட் அண்ட் கறார் உத்தரவு!
இதேபோல் அன்னையர் தினத்தையொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பின் மொழியை நம் அனைவருக்கும் அறிமுகம் செய்த அற்புதக் கடவுள்! அன்னையின் தூய அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை இவ்வுலகில்! தரணி போற்றும் நம் தாய்மார்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள்!”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அன்னையர் தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
“சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!’ என்கிறார் நபிகள் நாயகம்! ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்! ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை! எல்லோருடைய இடத்தையும் தாய் நிரப்பிவிடுகிறாள்!
தாய்மையைப் போற்றுவோம்!
தாய்மையை வணங்குவோம்!
நம் தாய்மார்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த அன்னையர் நாள் வாழ்த்துகள்’! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு இது கூட தெரியாதா? எவ்ளோ பெரிய அசிங்கமாகிருக்கும்..! லைப்ட் & ரைட் வாங்கிய நயினார்..!