"உஜ்வாலா திட்டம்"..! மோடியால் இழைக்கப்பட்ட துரோகம்..! காங். எம்.பி. மாணிக்கம் தாகூர் விளாசல்..!!
உஜ்வாலா திட்டத்தை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் 2016 ஆம் ஆண்டு மே 1 அன்று உத்தரப் பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா இந்தியாவின் கிராமப்புற மற்றும் ஏழை மக்களின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு முக்கியமான திட்டமாகும். சுத்தமான எரிபொருள், சிறந்த வாழ்க்கை என்ற முழக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பாரம்பரிய சமையல் எரிபொருள்களால் ஏற்படும் உட்புற காற்று மாசுபாட்டை குறைத்து, பெண்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு அதிகாரமளிக்கவும் உருவாக்கப்பட்டது.
இந்திய கிராமங்களில் பெரும்பாலான ஏழை குடும்பங்கள் மரம், விறகு, காலி, எரு போன்ற பாரம்பரிய எரிபொருள்களைப் பயன்படுத்தி சமைத்து வந்தன. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் நீண்ட நேரம் புகைக்கு உள்ளாகி, சுவாசப் பிரச்சினைகள், கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாகினர்.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், உஜ்வாலா திட்டம் ஏழை குடும்பங்களின் பெண் உறுப்பினர்களின் பெயரில் இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. உஜ்வாலா திட்டம் பாஜகவினர் கொடுத்த மிகப்பெரிய வெற்று வாக்குறுதி இன்று அம்பலமாகறது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். ஏழை பெண்களுக்கு மோடி பரிசு என்றார். 2016 ஆம் ஆண்டு 12 சிலிண்டர்கள் மானியம், கடந்த ஆண்டு 9 சிலிண்டர்களாக குறைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் என்றும் போராடும்... திருமாவளவனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி.!
இன்று வெறும் 4 சிலிண்டர்களாக மேலும் குறைக்கப்பட்ட இருப்பதாகவும் ஒரு ஏழை பெண் 365 நாளும் சமைக்க வேண்டும் ,மோடி அரசு வெறும் 4 முறை மட்டுமே மானியம் தருகிறது எனவும் தெரிவித்தார். சராசரி நுகர்வு 4 சிலிண்டர்தான் என்று அரசு சொல்கிறது என்றும் உண்மை என்னவென்றால், ஏழை குடும்பஙகள் வாங்க வசதியில்லாதால் குறைவாக பயன்படுத்துகின்றனர், தேவை இல்லாததால் அல்ல என்று குறிப்பிட்டார். இந்தியாவின் ஏழை பெண்களுக்கு மோடியால் இழக்கப்பட்ட துரோகம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: தொடர் தேர்தல் தோல்விகளின் விரக்தியே காரணம்..!! சீமான் விமர்சனங்களுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி..!!