×
 

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. இப்ப மாங்காயே ரெண்டு! ஜி.கே. மணியை வெச்சுக்கிட்டே நக்கலடித்த அமைச்சர்..!

ஒரே கல்லில் 2 மாங்காய், தற்போது மாங்காயே இரண்டு என அமைச்சர் பன்னீர் செல்வம் நக்கலடித்து உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியில்நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் காரணமாக கட்சிக்குள் கடுமையான உட்கட்சி பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. 2024 டிசம்பரில் புதுச்சேரியில் நடைபெற்ற பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில், இளைஞரணி தலைவர் நியமனத்தை மையமாக வைத்து ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ராமதாஸ், முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமிக்க வலியுறுத்தியபோது, அன்புமணி அவரது அனுபவமின்மையை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மோதல் மேடையில் ஆவேசமான விவாதமாக வெடித்தது, இதனால் கட்சி தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டது

சமீபத்தில் ராமதாஸ் அன்புமணியை பாமகவின் நிர்வாகக் குழுவிலிருந்து நீக்கி, 21 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை அமைத்தார். இது இருவருக்கும் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியது. ராமதாஸ், கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என வலியுறுத்த, அன்புமணி தனது தலைமையை நிலைநாட்ட முயற்சித்து வருகிறார். ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான பகிரங்க மோதல்கள், கட்சியை குடும்ப அரசியலின் பிடியில் இருப்பதாக விமர்சனங்களை எழுப்பியுள்ளன. 

இதையும் படிங்க: அடுத்தவங்க சொன்னா அப்படியே கேட்போமா? எல்லாம் எங்களுக்கு தெரியும்.. ஜி.கே மணி கொந்தளிப்பு..!

திமுகவினர் பாமகவை சாதியவாத கட்சி என்று விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அரசியல் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரே கல்லில் 2 மாங்காய், தற்போது மாங்காயே இரண்டு என அமைச்சர் பன்னீர் செல்வம் நக்கலடித்து உள்ளார். 

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையிலேயே பாமகவை அமைச்சர் விமர்சித்து பேசினார். ஒரே கல்லில் 2 மாங்காய், தற்போது மாங்காயே இரண்டு என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ஐயா சீக்கிரமே குணமாகி வாங்க..! ஜி.கே மணியை நேரில் சென்று நலம் விசாரித்த சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share