ராமதாசுடன் முகுந்தன் திடீர் சந்திப்பு.. கட்சி பூசல் குறித்து ஆலோசனை?
சென்னை ஆழ்வார்பேட்டையில் பாமக நிறுவனர் ராமதாசுடன் அவரது பேரன் முகுந்தன் பரசுராமன் நேரில் சந்தித்தார்.
முகுந்தன் பரசுராமன், ராமதாஸின் மகள்வழிப் பேரன். அன்புமணி ராமதாஸின் அக்காவான காந்திமதி - பரசுராமன் தம்பதியினரின் மகன் தான் முகுந்தன். பாமகவில் மாநில ஊடகப் பிரிவு செயலாளராகப் பணியாற்றி வந்த முகுந்தன், அண்மையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டார்.
இது அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. கட்சியே இரண்டாக உடையும் சூழலுக்கு சென்ற நிலையில், ராமதாஸ் - அன்புமணி மோதலை தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவர் பதவியை முகுந்தன் ராஜினாமா செய்தார்.
இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு பெருந்துரோகம் செய்கிறது திமுக அரசு.. கடுமையாக சாடிய அன்புமணி..!
முகுந்தனுக்கு சொந்த தொழில் செய்வதில் தான் ஆர்வம் என ராமதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் பாமக நிறுவனர் ராமதாசுடன் அவரது பேரன் முகுந்தன் பரசுராமன் நேரில் சந்தித்தார்.
இதையும் படிங்க: 5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!