×
 

களம் கண்ட துறைகளில் முத்திரை பதித்தவர்... முரசொலி மாறனுக்கு முதல்வர் புகழாரம்

முரசொலி மாறனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்குவளையில் 1934 ஆகஸ்ட் 17 அன்று சண்முகசுந்தரம் - சண்முகசுந்தரி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தியாகராஜசுந்தரம். இவரது தந்தை, திருவாரூரில் உள்ள சிவபெருமான் கோயிலின் திருப்பெயரான தியாகராஜர் மீது கொண்ட பக்தியால் இப்பெயரைச் சூட்டினார். மாறனின் தாய் சண்முகசுந்தரி, திமுக தலைவர் மு. கருணாநிதியின் இரண்டாவது சகோதரி. இந்த உறவு மூலம் கருணாநிதியுடனான நெருக்கமான பிணைப்பு, மாறனின் அரசியல் மற்றும் பத்திரிகை வாழ்க்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டின் அரசியல், பத்திரிகை, திரைப்படம் மற்றும் கணினித்தமிழ் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும், முரசொலி வார இதழின் ஆசிரியராகவும், திரைப்படக் கலைஞராகவும், தமிழ் மென்பொருள் வளர்ச்சிக்கு முன்னோடியாகவும் பல தளங்களில் தனது முத்திரையைப் பதித்தவர். இவரது வாழ்க்கை, திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும், தமிழர் நலனையும் மையப்படுத்திய பயணமாக அமைந்தது.

எளிய வேளாண் குடும்பத்தில் தியாகராஜசுந்தரமாகத் தோன்றி, முத்தமிழறிஞர் கலைஞரின் தோளில் வளர்ந்து, அவரால் நெடுமாறன் எனப் பெயர்மாற்றமும் பெற்று, அவ்வுயிர்நிகர் தலைவரின் மனசாட்சியாகவே திகழ்ந்தவர் முரசொலி மாறன் என்று முதலமைச்சர் தெரிவித்தார். இந்திய ஒன்றியத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக ஏற்றமும் கண்ட மதிப்புக்குரிய முரசொலி மாறன் பிறந்தநாள் என கூறினார்.

இதையும் படிங்க: தரமான கல்வி கொடுக்க முடியல.. இதுதான் திராவிட மாடலா? திமுகவை வறுத்தெடுத்த சீமான்..!

இதழியல், திரைப்படம், அரசியல் எனக் களம்கண்ட அனைத்துத் துறைகளிலும் தனிமுத்திரை பதித்த, திராவிட இயக்க வரலாறு, ஏன் வேண்டும் இன்பத் திராவிடம், மாநில சுயாட்சி எனக் காலவெள்ளத்தில் கரைந்திடாக் கருத்துக் கருவூலங்களை நமக்காக வழங்கிச் சென்றிருக்கும் அவரது பணிகளை நன்றியோடு நினைவு கூறுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நீங்க ஆளுநரா இல்ல பாஜக தலைவரா? பதில் சொல்லுங்க சார்! கனிமொழி காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share