நகைக்காக மூதாட்டி கொடூரக் கொலை... நேபாள நாட்டு பணிப் பெண்ணை தட்டி தூக்கிய போலீஸ்..!!
கோவையில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நேபாள நாட்டு பணிப்பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளை இலக்காகக் கொண்டு கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. பெரும்பாலான சம்பவங்களில் கழுத்தை நெரித்தல், கத்தியால் குத்துதல், தடியால் அடித்தல் போன்ற கொடூர முறைகளில் கொலை செய்யப்பட்டு, காது, மூக்கு கிழித்து அல்லது நகைகளை பறித்து எடுக்கப்படுகின்றன.
சில சமயங்களில் வீட்டை தீ வைத்து அழித்து சாட்சிகளை மறைக்க முயல்கின்றனர்.சேலம், காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் 83 வயதான கஸ்தூரி என்ற மூதாட்டி. இவர் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் கை மற்றும் கால்களை கட்டி போட்டு கொலை செய்யப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கஸ்தூரியை கொலை செய்துவிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. மருத்துவர் ராம்குமார் இவரின் தாயார் ஆன கஸ்தூரி வீட்டில் தனியாக இருந்த இந்த கொடூர நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: மூதாட்டி கொடூரக் கொலை... பணிப் பெண்ணை தேடி மகாராஷ்டிரா விரைந்த தனிப்படை..!!
இதற்கிடையில் வீட்டில் பணிபுரிந்த நேபாள நாட்டு பணிப்பெண் தலைமறைவாகி இருப்பதால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. போலீசார் அந்த பணிப்பெண்ணை தேடி வந்தனர். நேபாள நாட்டு பணிப்பெண்ணை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 2 தனி படை போலீசாரும் அந்த பணிப்பெண்ணை பிடிப்பதற்காக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு விரைந்தனர். இந்த நிலையில், பெங்களூருவில் வைத்து 2 கூட்டாளிகளை போலீசார் கைது செய்த நிலையில் முக்கிய குற்றவாளியான நேபாள நாட்டு பணிப் பெண் சுர்ஜி என்பவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: OVER... OVER..! உங்க ஆட்சியின் ஆயுசு ஓவர்தான் ஸ்டாலின் சார்..!! சாடிய அதிமுக..!!