×
 

சென்னையில் ஓர் பயங்கரம்... பெண்ணை கொலை செய்துவிட்டு சடலத்தை வன்கொடுமை செய்த கொடூரம்..!!

சென்னையில் பெண் ஒருவரை கொலை செய்துவிட்டு அவரது சடலத்தை வன்கொடுமை செய்த கொடூர நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகும். இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றமாகும். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது. இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது.

குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் பாராமல் நடக்கும் வன்கொடுமை குற்றங்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் 54 வயதான பெண்ணை கொலை செய்து விட்டு அவரின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர நிகழ்வு நிகழ்ந்துள்ளது. முகப்பேர் ஜே.ஜே நகர் பகுதியில் யாசகம் பெற்று வந்த பெண்ணை ஷேக் என்பவர் கொலை செய்துள்ளார்.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் பயங்கரம்... வீடு புகுந்து பாட்டி, பேத்தி கத்தியால் குத்திக்கொலை... வெறியாட்டம் ஆடிய இளைஞர்...!

பின்னர் அவரது சடலத்தை வன்கொடுமை செய்திருக்கிறார். நேற்று இரவு மது போதையில் இருந்த ஷேக் இரும்பு கம்பியால் பெண்ணை தலையில் தாக்கி கொலை செய்து இருக்கிறார். தொடர்ந்து அந்தப் பெண் உயிரிழந்த நிலையில் அவரின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் வெளியாகி உள்ளது. பெண்ணை கொலை செய்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஷேக் என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். கொலை செய்துவிட்டு காலையில் அதே இடத்திற்கு சென்று பெண்ணின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சதக்... சதக்...!! - டிவி சவுண்டை குறைக்கச் சொன்னது குத்தமா?... கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி...!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share