ஷாக்..! இசையமைப்பாளர் தேவாவுக்கு என்ன ஆனது.? மருத்துவமனை விளக்கம்.!
இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு என்ன காரணம் என மருத்துவமனை விளக்கம் கொடுத்துள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், ‘தேனிசைத் தென்றல்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான தேவா இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 75. நெஞ்சுவலி காரணமாக இன்று காலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார். இந்த செய்தி திரையுலகினரையும் இசை ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.தேவநேசன் சொக்கலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட தேவா, 1950ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி சென்னை மைலாப்பூரில் பிறந்தார்.
சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டிருந்த அவர், முறையான பயிற்சி இல்லாமலேயே ஹார்மோனியம் கற்றுக்கொண்டு இசைப் பயணத்தைத் தொடங்கினார். நாடக மேடைகளில் பணியாற்றிய பின்னர், பக்தி பாடல்கள் அமைத்து பல ஆல்பங்களை வெளியிட்டார். 1980களின் நடுப்பகுதியில் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான அவர், ‘மட்டுக்கார மன்னாரு’ படத்தின் மூலம் முழுமையான இசையமைப்பாளராக அங்கீகாரம் பெற்றார்.
அதைத் தொடர்ந்து ‘வைகாசி பொறந்தாச்சு’, ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘ஆசை’, ‘காதல் கோட்டை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்றார்.ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் அவரது இசை பெரும் பங்காற்றியது. குறிப்பாக கானா பாடல்களை தமிழ் திரையுலகில் பிரபலப்படுத்தியதில் தேவாவின் பங்கு முக்கியமானது.
இதையும் படிங்க: #BREAKING: தேனிசைத் தென்றல் இசையமைப்பாளர் தேவா மறைவு..! பேரதிர்ச்சி.!!
இன்று காலை நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தேவாவின் உயிர் பிரிந்தது. இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு என்ன காரணம் என்று மருத்துவமனை விளக்கம் கொடுத்திருக்கிறது. மருத்துவர் வெற்றி என்பவர் கூறுகையில், இசையமைப்பாளர் தேவா மருத்துவமனை அடைத்து வரப்பட்ட போதே மயக்க நிலையில் தான் இருந்தார் என்று தெரிவித்துள்ளார். இதயத்துடிப்பு இல்லாமல் அழைத்துவரப்பட்ட தேவாவிற்கு எல்லாவிதமான அவசர சிகிச்சையும் தரப்பட்டதாக கூறினார். இதயத்தை இயங்க வைக்க சிபிஆர் கொடுத்ததாகவும் ஷார்ட் உள்ளிட்ட அவசர சிகிச்சை கொடுத்ததாகவும் மருத்துவர் சிவதர்ஷினி தெரிவித்திருந்தார். இதயத்துடிப்பு மீண்டும் வராததால் காலை 11 மணியளவில் தேவா இறந்துவிட்டதாக அறிவித்ததாக தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: #BREAKING: தேனிசைத் தென்றல் இசையமைப்பாளர் தேவா மறைவு..! பேரதிர்ச்சி.!!