×
 

மருத்துவ மாணவன் கிஷோர் மீட்பு: என் பொது வாழ்வின் ஆகச்சிறந்த சாதனை! - திருச்சியில் துரை வைகோ எம்.பி. நெகிழ்ச்சி!

மீட்கப்பட்ட தமிழக மாணவன்! - ரஷ்ய போர்க்களத்திலிருந்து கிஷோர் சரவணனை மீட்ட துரை வைகோ எம்.பி.

தனது அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலேயே மிகவும் மகிழ்ச்சியான தருணம் இதுதான் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, ரஷ்யப் போர்க்களத்தில் சிக்கியிருந்த தமிழக மருத்துவ மாணவன் கிஷோர் சரவணனை மீட்டது குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன், ரஷ்யாவில் கல்வி பயில சென்றபோது சில சட்டச் சிக்கல்களில் சிக்கித் தவறாகச் சித்தரிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் ரஷ்ய ராணுவத்தின் மூலம் உக்ரைன் போர்க்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். போரின் போது குண்டடிபட்டுப் படுகாயமடைந்த கிஷோர், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். என் மகன் உயிரோடு இருக்கிறான், ஆனால் எப்போது வேண்டுமானாலும் மரணிக்கலாம் என்ற நிலையில் ஒரு பெற்றோர் தவிப்பது மிகப்பெரிய வேதனை என கிஷோரின் பெற்றோர் கண்ணீர் மல்கத் துரை வைகோவிடம் முறையிட்டனர்.

கடந்த ஜூலை 26-ஆம் தேதி கிஷோரின் பெற்றோரை சந்தித்த துரை வைகோ, உடனடியாக டெல்லி சென்று இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெயசங்கர் அவர்களை நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, கிஷோர் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் மற்றும் பாஸ்போர்ட் விபரங்களைச் சமர்ப்பித்தார். வெளியுறவுத்துறை செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரி மற்றும் ரஷ்யாவிற்கான இந்தியத் தூதர் ஆகியோரைத் தொடர்ந்து சந்தித்து, கிஷோரின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் நேரில் சந்தித்து, போர்க்களத்தில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களைப் பாதுகாப்பாக மீட்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: வைகோவின் 'சமத்துவ நடைபயணம்' இன்று தொடக்கம்!  தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 

தொடர் அழுத்தங்களின் விளைவாக, சுமார் நான்கு வார காலப் போராட்டத்திற்குப் பிறகு கிஷோர் சரவணன் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்துப் பேசிய துரை வைகோ, நள்ளிரவு 12 மணிக்குக் கூட போர்க்களத்திலிருந்து அழைப்புகள் வரும்; என்ன செய்யப் போகிறோம் என்ற தவிப்பு இருந்தது. இன்று அவர் மீட்கப்பட்டது நான் மார்தட்டிக்கொள்ளும் மிகப்பெரிய சாதனையாகவும், என் வாழ்வின் மகிழ்ச்சியான நாளாகவும் கருதுகிறேன் எனத் தெரிவித்தார்.


 

இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தலுக்கு ரெடி! - "பாஜகவின் வஞ்சகத்தை வேரறுப்போம்!" வைகோ தலைமையில் 7 அதிரடி தீர்மானங்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share