#BREAKING உயிர் பிரிந்தது... நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானார்...!
நாகாலாந்து ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் (80) உடல்நலக் குறைவால் காலமானார்.
நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனது வீட்டில் கடந்த 8 ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த இல.கணேசனை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இல.கணேசன், இன்று மாலை 6.26 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 80. 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி முதல் நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக அவர் பதவி வகித்து வந்தார்.
1945 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தார்.தமிழ்நாட்டில் பாஜகவிற்கு அடித்தளம் அமைத்தவர் இல கணேசன். மிக இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு இந்துத்துவ பணியை மேற்கொண்டு வந்தார்.
திருமணம் செய்து கொள்ளாமல் பொது வாழ்க்கையிலேயே தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி வந்தார். தனது பணியை திறந்து விட்டு முழு நேர ஆர் எஸ் எஸ் செயல்பாட்டாளராக பணியாற்றி வந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த அவலம்... கை, கால்கள் உடைந்து மரணித்த கொடுமை...!