×
 
☰

ஓடும் காரில் மாணவிக்கு பாலியல் தொல்லை... தலைமறைவாக இருந்த தவெக நிர்வாகியை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

நாகர்கோவிலில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் தக்கலை பகுதியைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி ஒருவரும் படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி முடிந்து மாலையில் வீட்டிற்குச் செல்வதற்காக இருவரும் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது, அந்த வழியாகத் தக்கலை பகுதியைச் சேர்ந்த தவெக மத்திய மாவட்டச் சிறப்பு உறுப்பினரான கிறிஸ்டோபர் காரில் வந்துள்ளார்.

இருவரையும் வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறியதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவிகள் இருவரும் அவரது காரில் ஏறிச் சென்றுள்ளனர். முதலில் தவெக பெண் நிர்வாகியை அவரது வீட்டின் அருகே இறக்கிவிட்ட கிறிஸ்டோபர், பின்னர் கல்லூரி மாணவியை குலசேகரத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர்களுக்கு 3 கன்டிஷன்... கட் அண்ட் கறாராக சி.எம். விஜய் போட்ட உத்தரவு... என்ன தெரியுமா?

அப்போது, கல்லூரி மாணவியிடம் கிறிஸ்டோபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த மாணவி தனது தோழியிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தக்கலை காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, கிறிஸ்டோபர் தலைமறைவானதாகக் கூறப்படும் நிலையில், அவரைப் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை அவரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, அவரைச் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு முதல் தொழில் முதலீடு வரை.! விஜய் அமைச்சரவையின் 4 முக்கிய முடிவுகள்..! நிர்மல் குமார் பேட்டி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share