களைகட்டிய நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா... நாகைக்கு உள்ளூர் விடுமுறை... முக்கிய அறிவிப்பு.!
நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் ஒன்றாம் தேதி நாகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடற்கரை நகரமான நாகூரில், இஸ்லாமிய பக்தர்களின் மனதில் தனி இடம் பெற்றுள்ள நாகூர் ஆண்டவர் தர்கா, உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற ஒரு ஆன்மிக தலமாக விளங்குகிறது. இந்த தர்காவின் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழா, சூஃபி புனிதரான ஷாஹுல் ஹமீத் அவர்களின் ஆண்டு திருவிழாவாகும்.
இது 14 நாட்கள் நீடிக்கும் ஒரு பிரமாண்டமான கொண்டாட்டமாகும். இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். இது 469ஆவது கந்தூரி விழாவாக இந்த ஆண்டு நவம்பர் 21 அன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இந்த விழா நவம்பர் 30 அன்று சந்தனக்கூடு நிகழ்ச்சியுடன் முடிவடையும். இந்த விழாவானது, மதச்சார்பற்ற தமிழகத்தின் அழகை உணர்த்தும் ஒரு உயிரோட்டமான சின்னமாகத் திகழ்கிறது.
இந்த விழா, 176 ஆண்டுகள் பழமையான செட்டி பல்லக்கு உள்ளிட்ட பாரம்பரிய ஊர்வலங்களை கொண்டாடுகிறது. கந்தூரி விழா, இந்த தர்காவின் ஆன்மீக சக்தியை பிரதிபலிக்கும் ஒரு பெரிய பண்டிகை. லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து பக்தர்களை கொண்டு வரும் இந்த பேருந்துகள், நாகூர்-நாகப்பட்டினம், காரைக்கால்-நாகூர் வழித்தடங்களில் இயங்கும்.
இதையும் படிங்க: திருவண்ணாமலைக்கு நெய் காணிக்கை செலுத்தப் போறீங்களா?... இதை முதல்ல தெரிஞ்சிக்கோங்க...!
கந்தூரி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியின் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகூர் கந்தூரி விழாவினை முன்னிட்டு டிசம்பர் ஒன்றாம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர்! இந்தியாவை ஆயுத சோதனைக்கு பயன்படுத்திய சீனா! அமெரிக்கா அதிர்ச்சி தகவல்!