×
 

செங்கோட்டையனை இயக்குவது அண்ணாமலையா? நயினார் நாகேந்திரன் பரபரப்பு பிரஸ் மீட்

அதிமுகவில் ஏற்பட்ட பிளவிற்கு திமுக தான் காரணம் என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் நல்லாட்சி தருவதற்கு எல்லோரையும் அழையுங்கள் என்றும் வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் எனவும் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் 10 நாட்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்து இருந்தார்.

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும், செங்கோட்டையனின் ஆதரவாளர்களையும் கட்சி பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். 

ஏராளமான நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய கடிதம் கொடுத்தனர். அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் எனக் கூறிய செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ் தனது முழு ஆதரவை தெரிவித்தார். இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க செங்கோட்டையனை பின்னிருந்து யாரோ இயக்குகிறார்கள் என்ற விமர்சனமும் எழுந்தது.

இதையும் படிங்க: பாஜகவில் இணைகிறாரா செங்கோட்டையன்? - டெல்லி சீக்ரெட்டை உடைத்த நயினார் நாகேந்திரன்...! 

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செங்கோட்டையனை இயக்குவது அண்ணாமலையா என்ற கேள்விக்கு நயினார் பதில் அளித்தார். அனைத்தையும் தூண்டி விடுவது திமுக தான் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டினார். அதிமுக கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கு பின்னணிகள் இருப்பது திமுக தான் என பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும் செங்கோட்டையனை தற்போதைக்கு பாஜக சந்திக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணாமலையால் பலி கிடா ஆன நயினார் நாகேந்திரன்... டிடிவி தினகரன் விலகலுக்கு காரணம் இதுவா? 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share